உள்ளூர் செய்திகள்

எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு எழுதுபவர்களுக்கு...

இன்டிகிரேட்டட் காமன் என்ட்ரன்ஸ் டெஸ்ட் ஆந்திர மாநிலத்தில் உள்ள யூனிவர்சிட்டிகளில் எம்.சி.ஏ. மற்றும் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் பொதுவான நுழைவுத் தேர்வு தான் இந்த ஐ.சி.இ.டி. இதனை எந்த பல்கலைக் கழகம் வேண்டுமானாலும் நடத்தலாம். விண்ணப்பப் படிவம் ரூ.250க்கு கிடைக்கும். கல்வித் தகுதி : 3 ஆண்டுகள் கொண்ட ஏதேனும் பட்டப்படிப்பு மற்றும் பிளஸ் 2 ல் கணிதப் பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும். தேர்வு முறை : அனலிடிகல், கணிதம், கம்யூனிகேஷன் அபிலிடி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 200 கேள்விகள் கேட்கப்படும். இரண்டரை மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது. 200க்கு குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியமாகும். மேலும் விவரங்கள் அறிய www.icet2010.net எப்.எம்.எஸ்.இந்தியாவில் உள்ள முதன்மை நிறுவனங்களில் ஒன்றான பேகல்டி ஆப் ஸ்டடிஸ், தனியாக நுழைவுத் தேர்வினை நடத்துகிறது. ரூ.750க்கு விண்ணப்பப் படிவம் கிடைக்கும். கல்வித் தகுதி : 3 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்பு ஒன்றை 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை :  இதில் குறிப்பிட்டு எந்த பாடப்பிரிவும் சொல்லப்படுவது இல்லை. 200 அப்ஜெக்டிவ் கேள்விகள் கொண்ட இந்த தேர்விற்கு இரண்டு மணி நேரம் ஒதுக்கப்படும். மாணவர்களின் செயல்படும் வேகம் மற்றும் திறனை அறியும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும். பொதுவாக எப்.எம்.எஸ். நுழைவுத் தேர்வு கேள்வித்தான் குவான்டிடேட்டிவ், வெர்பல், அனலைடிகல் அன்ட் லாஜிகல் ரீசனிங் பிரிவுகளின் கீழ் கேட்கப்படுவதுண்டு. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். மொத்த மதிப்பெண்ணில் 50% மதிப்பெண்ணாவது மாணவர்கள் பெற்றிருப்பது அவசியம். மேலும் விவரங்கள் அறிய www.fms.edu இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் ட்ரேட் (ஐ.ஐ.எப்.டி.)இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் ட்ரேட் இந்தியாவின் மிக முக்கியமான வணிகப் பள்ளியாக விளங்குகிறது. இங்கு மிகக் குறைந்த அதாவது 180 சேர்க்கை இடங்கள் இருப்பினும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதே இந்த கல்லூரியின் பெருமையை உணர்த்துகிறது. விண்ணப்பப் படிவம் ரூ.1500 ஆகும். கல்வித் தகுதி : 3 ஆண்டுகள் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் முறை : ஆங்கிலப் புலமை, லாஜிக்கல் ரீசனிங், குவான்டிடேட்டிவ அனலைசிஸ், பொது அறிவு மற்றும் விழிப்புணர்வு போன்ற பிரிவுகளின் கீழ் அப்ஜெக்டிவ் கேள்விகள் கேட்கப்படும். மாணவர்கள் குழு ஆலோசனை, நேர்முகத் தேர்வு, கட்டுரை எழுதுதல் போன்ற சுற்றுகளைக் கடந்து சேர்க்கை பெறுவர். மேலும் விவரங்கள் அறிய www.iift.edu ஜாய்ன்ட் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வுமும்பை, டெல்லி, கான்பூர், காராக்புர், சென்னை, ரூர்கி ஆகிய இடங்களில் உள்ள ஐஐடி நிறுவனங்கள் தங்களது 2 ஆண்டு முழு நேர பட்ட மேற்படிப்புக்கான மேனேஜ்மென்ட் ப்ரோக்ராம்களில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வினை (ஜேஎம்இடி) நடத்துகிறது. விண்ணப்பப் படிவம் ரூ.750, கல்வித் தகுதி : பொறியியல் / டெக்னாலஜி பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்ட மேற்படிப்பினை முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை : அப்ஜெக்டிவ் வகையில் 120 கேள்விகளைக் கொண்ட தேர்வை எழுத 3 மணி நேரம் வழங்கப்படும். வெர்பல் கம்யூனிகேஷன், லாஜிகல் ரீசனிங், க்வான்டிடேட்டிவ் அபிலிடி, டேட்டா இன்டர்பிரிட்டேஷன் ஆகிய பிரிவுகளின் கீழ் கேள்விகள் இருக்கும். தேர்வின் முடிவைக் கொண்டு ஒவ்வொரு ஐஐடியும் தனித்தனியாக பட்டியலை தேர்வு செய்து சேர்க்கைக்கான அடுத்த கட்ட சுற்றுகளுக்கு மாணவர்களை அழைக்கும். மேலும் விவரங்கள் அறிய http://web.iitd.ac.in/`gate/jmet


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்