சிதார் நிறுவனத்தில் பணி வாய்ப்புகள்
சொசைட்டி பார் இன்டக ரேடட் சர்க்யூட் டெக்னாலஜி அண்டு அப்ளைடு ரிசர்ச் என்ற சிதார் (எஸ்.ஐ.டி.ஏ.ஆர்.,) நிறுவனம் சொசைடீஸ் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டு புது டில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அரசுத் துறை சார்ந்ததாகும். புது டில்லியைத் தவிர்த்து பெங்களூருவிலும் இந்த நிறுவனத்திற்கு கிளை உள்ளது. டிஜிட்டல் சி.எம்.ஓ.எஸ்., ஏ.எஸ்.ஐ.சி., உபகரணங்களை வடிவமைத்தல் மற்றும் உருவாக்கும் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சிதார் நிறுவனத்தில் டெக்னிகல் அஸிஸ்டெண்ட்ஏ , கோஆர்டினேட்டர் "ஏ" மற்றும் டெக்னீசியன்1 ஆகிய பிரிவுகளில் உள்ள 12 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ன தேவை: சிதார் நிறுவனத்தின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். டெக்னிகல் அசிஸ்டன்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்.சி., படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் அல்லது மூன்றாண்டு கால டிப்ளமோ படிப்பை இதே பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் மூலமாக முடித்திருக்க வேண்டும். கோஆர்டினேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பி.காம்., அல்லது பி.ஏ., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். டெக்னீசியன் பதவிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு படிப்பை முடித்து அதன் பின்னர் ஐ.டி.ஐ., பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பது எப்படிசிதார் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க முதலில் ரூ.100/க்கான டி.டி., அல்லது போஸ்டல் ஆர்டரை "SITAR" என்ற பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். இதன் பின்னர் விண்ணப்பத்தை நிரப்பி, சான்றிதழ் நகல்களையும் இணைத்துப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்பும் கவரின் மீது தவறாமல் "Application for the Post of _______ Post No_____Advt. No.02/2011" என்று குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்களை 24.04.2011க்குள் கிடைக்குமாறு பதிவு அல்லது விரைவுத் தபாலில் அனுப்ப வேண்டும். முகவரிChief Executive Officer (CEO),Society for Integrated CircuitTechnology and AppliedResearch (SITAR),P.O. Box No.1640,Doorvani Nagar P.O.,Bangalore - 560 016. விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 24.04.2011