உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ.இ.இ.இ. தேர்வு தேதி அறிவிப்பு

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக இந்தியா முழுவதும் சி.பி.எஸ்.இ. நடத்தும் இந்த தேர்வு வரும் மே மாதம் 1 ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா மட்டுமின்றி இத்தேர்வானது வெளிநாடுகளிலும் சில மையங்களில் நடத்தப்படுகிறது. பி.இ/பி.டெக்/பி.ஆர்க்/பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கு, நாட்டின் பலவித கல்வி நிறுவனங்களில் சேர இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு விட்டன என்று சி.பி.எஸ்.இ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் யாருக்காவது இன்னும் அனுமதி அட்டைகள் கிடைக்காமல் இருந்தால் அவர்கள் உடனடியாக சி.பி.எஸ்.இ. அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்கள் போலி(டூப்ளிகேட்) அனுமதி அட்டையை பெறலாம். ஏ.ஐ.இ.இ.இ. தேர்வை எழுதும் அனைத்து மாணவர்களின் பெயர்கள் மற்றும் தேர்வு நிலைய விவரங்கள் www.aieee.nic.in மற்றும் www.cbse.nic.in வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. தங்களின் விவரங்களைப் பெற விண்ணப்ப படிவ எண் அல்லது பதிவு எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உள்ளிட்டு, மாணவர்கள், விவரங்களை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்