மாணவர்களுக்கான வினாடி-வினா நிகழ்ச்சி
சென்னை: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், "விஞ்ஞானிகள் சந்திப்பு" என்ற நிகழ்ச்சியை வரும் ஏப்ரல் 21 ம் தேதி நடத்துகிறது. "புவி நாளை" முன்னிட்டு நடத்தப்படும் அந்த நிகழ்ச்சி மதியம் 2.30 முதல் மாலை 4.30 வரை நடக்கிறது. இதில், எகோ சயின்ஸ் ரிசர்ச் பவுண்டேஷன் இயக்குனர் சுல்தான் அகமது இஸ்மாயில் கலந்துகொண்டு, பூமி குறித்து சிறப்புரை ஆற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டி நடைபெறுகிறது. இந்த வினாடி-வினா, சுற்றுப்புற சூழல் சம்பந்தமானது. இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் www.tnstc@mds.vsnl.net.in என்ற வலைதளத்திற்கு இ-மெயில் அனுப்பி தங்களின் பெயர்களை பதிவுசெய்து கொள்ளலாம்.