இந்திய ராணுவத்தில் ஹவில்தார் பணியிடங்கள்
சர்வ தேச அளவில் மிகவும் பெயர் பெற்ற முப்படைகளில் ஒன்றான இந்திய ராணுவத்தில் (இந்தியன் ஆர்மி) ஆர்மி எஜூகேஷனல் கோர் 'எக்ஸ்' மற்றும் 'ஒய்' பிரிவுகளில் மொத்தம் 178 ஹவில்தார் எஜூகேஷன் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்புஇந்திய ராணுவத்தின் ஹவில்தார் எஜூகேஷன் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும் 25 வ்யதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதிஹவில்தார் எஜூகேஷன் பதவி &'எக்ஸ்&' பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., எம்.ஏ., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ., ஆகிய ஏதாவது ஒரு படிப்புடன் பி.எட்., படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் மூலமாக முடித்திருக்க வேண்டும். ஹவில்தார் எஜூகேஷன் பதவி 'ஒய்' பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ., படிப்பிற்குப் பின் பி.எட்., முடிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு ஆங்கிலம் அல்லது இந்தி மொழியறிவு கட்டாயத் தேவையாகும். இளநிலைப் பட்டப்படிப்பு அளவில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இங்கிலீஷ், இந்தி, உருது மொழிகளில் லிட்டரேச்சர், வரலாறு, புவியியல், சமூக அறிவியல், பொருளாதாரம், உளவியல், சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி முறைஇந்திய ராணுவத்தின் காலியிடங்கள் உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை ஆகிய நிலைகளுக்குப் பின் தகுதியுடையவர்களுக்கு மட்டும் புது டில்லியில் 31.07.2011 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பது எப்படிஹவில்தார் எஜூகேஷன் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 28.05.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்கள் அறிய இணைய தளத்தைக் கட்டாயம் பார்க்கவும். முகவரி 8 HQ Rtg Zone,Fort Saint George, CHENNAI - 600009. விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.05.2011