சமச்சீர் கல்வியில் பொருளாதாரப் பாடம்
மேல்நிலை வகுப்பு பாடப் புத்தகங்களில் மட்டுமே இருந்து வந்த பொருளாதாரப் பாடங்கள், வரும் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 6 முதல் 10 வகுப்பு வரையிலான புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்பு வரை இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்கள், பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், இதுவரை பதினொன்று மட்டும் பனிரெண்டாம் வகுப்பு பாடங்களில் மட்டுமே பொருளாதாரப் பாடம் இடம்பெற்றிருக்கும். இனி, 6ஆம் வகுப்பு முதலே பொருளாதாரப் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. மேல்நிலை வகுப்புகளில் படிக்க வேண்டிய பாடங்கள், சமச்சீர் கல்வி புத்தகங்களின் மூலம், உயர்நிலை வகுப்புகளிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ஆசிரியர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.