உள்ளூர் செய்திகள்

இக்னோ ஆராய்ச்சி கொள்கையில் மாற்றம்

டெல்லி: தனது ஆராய்ச்சி கொள்கை மற்றும் ஆராய்ச்சி உதவி செயல்பாடுகளில், தனது கொள்கையை மாற்றிக்கொள்ள, இக்னோ முடிவுசெய்துள்ளது. தொலைதூர கல்வி முறையில், முழுநேர ஆராய்ச்சி, பகுதிநேர ஆராய்ச்சி மற்றும் சிஸ்டமிக் ஆராய்ச்சி ஆகிய விஷயங்களில், தற்போதைய உலகளாவிய நிலையை கருத்தில் கொண்டே இந்த மாற்றத்திற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று இக்னோ வட்டாரங்கள் தெரிவித்தன. இக்னோ பல்கலையானது, ஆராய்ச்சி திட்டத்தை கொண்டுள்ளதுடன், ஆராய்ச்சி விடுப்புகளுக்கு ஊதியமும் வழங்குகிறது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகளுக்கு சென்றுவர, பயண உதவிகளையும் வழங்குகிறது. இக்னோவில், டாக்டோரல் மற்றும் போஸ்ட்-டாக்டோரல் தகுதியுடைய 1000 -க்கும் மேற்பட்ட பல்வேறு நிலைகளிலான ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் பிஎச்.டி. மற்றும் உயர் ஆராய்ச்சி தகுதிகளுடைய 800 ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகிறார்கள். மேலும் பிரத்யேக ஆராய்ச்சி பிரிவும் சமீபத்தில் இங்கே ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஆராய்ச்சி பணிகள் ஒருங்கிணைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்