உள்ளூர் செய்திகள்

செமஸ்டர் முறையை எதிர்க்கும் ஆசிரியர்கள்

டெல்லி பல்கலைக்கழகத்தில், வணிகப் பாடப்பிரிவினருக்கும், வரும் கல்வி ஆண்டு முதல் செமஸ்டர் முறையில் தேர்வு நடத்த திட்டமிட்டிருக்கும் நிர்வாகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் கலை பாடப்பிரிவு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து வெளியான அறிக்கையை எதிர்த்து ஆசிரியர்கள் கழகம் சார்பில் தொடர்ந்து மனு மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் முன் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்த பதில் மனுவை அனுப்பும் படி டெல்லி பல்கலைக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பதில் மனு வந்ததும், மே 11ஆம் தேதி விசாரணை நடைபெறும். இந்த செமஸ்டர் முறையால் அதிகமாக யார் பாதிக்கப்படப் போகிறார்கள், பல்கலைக்கழகமா, ஆசிரியரா? இருவருமே இல்லை. மாணவர்கள்தான் என்றனர். செமஸ்டர் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஏப்ரல் 19ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்யக் கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அறிவிக்கை வெளியாவதற்கு முன்பே, இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர்களையும், மாணவர்களையும் அழைத்து பேசி இருக்க வேண்டும் என்று மனுவியில் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேப் பல்கலையில் சுமார் 13 பாடப்பிரிவுகளுக்கு செமஸ்டர் தேர்வு முறை நடந்து கொண்டிருப்பதும், அறிவியல் பாடப்பிரிவிற்கு செமஸ்டர் முறையை ரத்து செய்யக் கோரி தொடுத்த மனு மீதான வழக்கு நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்