உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் நாளை வழிகாட்டி நிகழ்ச்சி

தினமலர் நாளிதழ் நடத்தும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை, கோவை, சென்னை, புதுச்சேரியை அடுத்து திருப்பூரில் நாளை துவங்குகிறது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணியளவில் டாக்டர். டி.வி. கோபால் அவர்களால் வழிகாட்டி நிகழ்ச்சி துவக்கி வைக்கப்பட உள்ளது. தாராபுரம் அரசு பொது மருத்துவமனை அருகே இந்த மண்டபம் அமைந்துள்ளது. மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து ஆலோசனை கூறும் கருத்தரங்குகளும், பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் அரங்கங்களும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் அமைந்திருக்கும். சனிக்கிழமையன்று துவங்கி ஞாயிற்றுக் கிழமை வரை நடக்கும் வழிகாட்டி நிகழ்ச்சி  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம். நாளை நடைபெறும் கருத்தரங்கில், சைலேந்திர பாபு, கணேஷ் மகாதேவன், சேகர், வஹிதா ஹோப்பல், ரமேஷ் பிரபா, வடிவு, ஞானசம்பந்தன் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்குகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்