இக்னோவில் ஆதார அறிவியல் பாடம்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், ஆதார அறிவியல் முதுநிலை டிப்ளமோ படிப்பினை ஆன்லைன் முறையில் படிக்கும் வகையில் அறிமுகப்படுத்துகிறது. டெல்லியில் நடைபெற்ற அறிமுக விழாவில், புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ஷைலேஷ் நாயக் கூறுகையில், இயற்கை மாற்றங்களைப் பற்றியதாக அதாவது மழைக்காலம், மழைப்பொழிவு, மேகங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். ஏதேனும் பல்கலையில், சமூகம் மற்றம் இயற்கை அறிவியல் மாற்றங்கள், கொள்கை அமைப்பாளர்கள் நிர்வாகம், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பொதுமக்களும் இந்த பாடப்பிரிவினை எடுத்து பயில முடியும். இது குறைந்தது 1 ஆண்டு காலமும், அதிகபட்சம் 4 ஆண்டு காலமும் கொண்டதாகும். இந்த பாடப்பிரிவினை துவக்குவதன் மூலம், உலக நாடுகளில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களின் பட்டியலிலும், ஆதார அறிவியல் பாடத்தை நடத்தும் பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் பெறுவதாக இக்னோவின் துணை வேந்தர் வி.என். ராஜசேகரன் பிள்ளை தெரிவித்தார்.