ஐ.ஐ.எம். காஷிப்பூர் அடிக்கல் நாட்டப்பட்டது
ரூ.800 கோடி செலவில் உத்தர்காண்ட் மாநிலம் காஷிப்பூரில் புதிய ஐ.ஐ.எம். உருவாக உள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். காஷிப்பூரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் ஐ.ஐ.எம். துவக்க விழாவில் உத்தர்காண்ட் முதலமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் மற்றும் முன்னாள் முதலமைச்சர் என்.டி. திவாரியும் பங்கேற்றனர். உத்தரகாண்ட் மாநிலத்திற்கு, கல்வியை உயர்த்துவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று கூறினார் கபில் சிபல். கல்வித் துறையில் வேகமாக முன்னேறி வரும் மாநிலங்களில் ஒன்றாக உத்தரகாண்ட் உள்ளது. உத்தரகாண்ட் மக்கள், தங்கள் மாநிலத்தில் ஐ.ஐ.எம். உருவாவது குறித்து நிச்சயம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். உத்தரகாண்ட் மாணவர்களும், இனி தங்களது சாதனைகள் மூலம் தங்கள் மாநிலத்திற்கு பெருமை சேர்க்க முடியும் என்று சிபல் பேசினார்.