உள்ளூர் செய்திகள்

குரூப் - 1 தேர்வுக்குபயிற்சி வகுப்பு துவக்கம்

சென்னை சி.ஐ.டி., நகரில், 15 ஆண்டுகளுக்கு மேலாக, மனித நேய அறக் கட்டளை சார்பில், மனித நேயம் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி மையம் நடத்தப் பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெற இயலாதவர்கள் மற்றும் கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடிந்தவர்களுக்காக, சென்னை ஊரப்பாக்கத்தில், சங்கம் ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தின் பயிற்சி வகுப்புகளை, மனித நேய அறக்கட் டளையின் நிறுவனரும், தலைவருமான சைதை சா.துரைசாமி துவக்கி வைத்தார்.இந்த மையத்தில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள், தேர்ச்சி பெற்று விட்டால், அவர்கள் செலுத்திய தொகையை மனித நேய அறக்கட்டளை திருப்பி வழங்கும்.முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வுக்கான பயிற்சியை இலவசமாக வழங்கும் என, அறக்கட்டளையின் தலைவர் அறிவித்துள்ளார். குரூப் - 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகளுக்கு பயிற்சி பெற விரும்புபவர்கள், பயிற்சி இயக்குனர், சங்கம் ஐ.ஏ.எஸ்., கல்வியகம், 3-சி, ரயில்வே கேட் ரோடு, சங்கர வித்யாலயா பள்ளி எதிரில் ஊரப்பாக்கம் என்ற முகவரியில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.இதற்கான பயிற்சி வகுப்புகள் இந்த வாரத்தில் துவங்க உள்ளன. மேலும் விவரங்களை பெற விரும்புவோர், 044-6555 6352, 99622 26820 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்