உள்ளூர் செய்திகள்

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி

இதுகுறித்து, அரசு விடுத்த செய்தி குறிப்பு:டான்சீட் எனப்படும் புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் கீழ், துவக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ, ஆறாம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அத்திட்டத்தின் வழியாக, பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக உடைய புத்தொழில் நிறுவனங்களுக்கு, 15 லட்சம் ரூபாயும்; இதர புத்தொழில் நிறுவனங்களுக்கு, 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஓராண்டு கால தொழில் வளர் பயிற்சி, வழிகாட்டுதல், தேசிய, பன்னாட்டு அளவிலான புத்தொழில் நிகழ்வுகளில் பங்கேற்க முன்னுரிமை ஆதரவுகள் வழங்கப்படும். உதவி பெறும் நிறுவனங்களிடம், ஸ்டார்ட் அப் டி.என்., 3 சதவீத பங்குகளை பெற்று கொள்ளும்.புத்தாக்க சிந்தனையுடன் செயல்பட கூடிய, வருங்காலங்களில் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கும் தொழில் மாதிரிகளை உடைய புத்தொழில் நிறுவனங்கள், திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், தமிழகத்தை தலைமையிடமாக கொண்டிருக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் டி.பி.ஐ.ஐ.டி., தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தகுதியான நிறுவனங்கள், www.startuptn.in இணையதளத்தில் பிப்., 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்