உதவித்தொகையுடன் தொழிற் பயிற்சி டிச.,10ல் ஆள்சேர்ப்பு துவக்கம்
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் பயிற்சி உதவித்தொகையுடன் இலவசமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 18லிருந்து 35 வயதுடைய இளைஞர், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த ஆண், பெண்கள் பயன்பெறலாம். கம்ப்யூட்டர் பயன்பாடு பட்டயம் (டி.சி.ஏ.,), கம்ப்யூட்டர் அச்சு வெளியீடு (டி.றி.பி.,), மருத்துவ ஆய்வுக்கூட நுட்பம் (மெடிக்கல் லேப் டெக்னிஷியன்) பயிற்சிகள் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடக்கிறது. உணவு தயாரித்தல் (ஃபுட் ப்ராசசிங்), ரொட்டி மற்றும் இனிப்பு வகைகள் (பேக்கரி மற்றும் ஃகன்பெக்சனரி) தயாரித்தல் பயிற்சி திருச்சி அரசன் உணவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடக்கிறது.அனிமேஷன் 2டி, 3டி, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் நெட்வொர்கிங், பயிற்சி திருச்சி கிரண் பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் நவீன ஆடை வடிவமைப்பு பயிற்சி திருச்சி ரீப் கல்வி நிலையத்தில் நடக்கிறது. தகவல் தொழில்நுட்பப்பயிற்சி, ஆட்டோமொபைல் பயிற்சி திருச்சி ஐ-லீடு பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. ஹைடெக் வெல்டிங் பயிற்சி திருச்சி சேஷாயி தொழிற்நுட்பப் பயிலகத்தில் நடக்கிறது. சுகாதார உதவியாளர் பட்டயப்பயிற்சி திருச்சி புனித அன்னாள் சமுதாயக் கல்லூரியில் நடக்கிறது. கம்ப்யூட்டர் அச்சு வெளியீடு (டி.றி.பி.,) திருச்சி சிஸ்வே கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. டாலி 9.0 திருச்சி சி.எம்.டி.இ.எஸ்., பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. கம்ப்யூட்டர் வழி இயந்திர கட்டுப்பாட்டு பயிற்சி ஈரோட்டிலுள்ள டீசல் மிஷனரி ஒர்க்ஸ் சி.என்.சி., மையத்திலும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.பயிற்சிக்கு குறைந்தப்பட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உரிய கல்வித்தகுதிச் சான்றுகளுடன், முகவரி, வயது மற்றும் ஆளறிச்சான்றுகளுடன் மாநகராட்சி அருகிலுள்ள பூமாலை வணிக வளாகத்தில் டிச., 10ம் தேதி காலை பத்து மணிக்கு நேரில் சென்று பயன் பெறலாம். மேலும் தகவலுக்கு காஜாநகரிலுள்ள மகளிர் திட்ட அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.