உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு ’ரிசல்ட்’; ’104’ல் சிறப்பு ஆலோசனை

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால், 104 சேவை மையத்தில் மாணவர்கள், பெற்றோருக்கு இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது.இதுகுறித்து, சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:பொதுவாக, தேர்வில் மதிப்பெண் குறைவு, தோல்வி காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பர். இந்த நேரத்தில் பெற்றோர் திட்டுவது, மாணவர்களிடம் விபரீத எண்ணங்களை ஏற்படுத்தி விடும். பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும். ஆறுதல் படுத்துங்கள்; முடியாவிட்டால், ஒரு முறை, 104ஐ அழையுங்கள்; உளவியல் ரீதியாக, இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனைகளை தருகிறோம்.இது, நல்ல பலன் தரும். இதற்காக, கூடுதலாக உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் ஆலோசனை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்