உள்ளூர் செய்திகள்

எஸ்.சி., எஸ்.டி., பிரிவுக்கு 11ல் மருத்துவ கவுன்சிலிங்

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. நேற்றைய கவுன்சிலிங்கில், பொது பிரிவில், 594 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், 502 பேர் பங்கேற்று, அரசு கல்லுாரிகளில், 46 எம்.பி.பி.எஸ்., - 19 பி.டி.எஸ்., இடங்களை பெற்றனர். சுயநிதி கல்லுாரிகளில், 116 எம்.பி.பி.எஸ்., - 17 பி.டி.எஸ்., இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர். மொத்தம், 198 இடங்கள் நிரம்பின.தற்போது, அரசு கல்லுாரிகளில், 367 எம்.பி.பி.எஸ்., - 78 பி.டி.எஸ்., இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில், 314 எம்.பி.பி.எஸ்., - 949 பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. பொது பிரிவினருக்கான கவுன்சிலிங், நாளை முடிய உள்ளது.இதைத் தொடர்ந்து, பட்டியலினத்தவர்கள், அருந்ததியினர், பழங்குடியினருக்கு, 11, 12, 14ம் தேதிகளில் கவுன்சிலிங் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்