உள்ளூர் செய்திகள்

துணை மருத்துவ படிப்புகள்; 1,144 மாணவர்கள் சேரலாம்

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், துணை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நான்கு சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பல இடங்கள் காலியாக இருப்பதால், அவற்றை நிரப்ப, மருத்துவக் கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.அந்த வகையில், தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், மருத்துவம் சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை, செப்., 30ல் இருந்து, அக்., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதியை, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் வெளியிட்டது.அதன்படி, இளநிலையில் துணை மருத்துவ படிப்பில் அரசு கல்லுாரிகளில், 107 இடங்களும்; தனியார் கல்லுாரிகளில் 1,037 இடங்களும் என, 1,144 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை, tnmedicalselection.net என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இன்றைக்குள் இடங்களை தேர்வு செய்யலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்