உள்ளூர் செய்திகள்

தனியார் வேலைவாய்ப்பு முகாம் 1,172 பேருக்கு பணி ஆணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, மாவட்ட அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.திண்டிவனத்தில் தனியார் கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமில், 167 க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 4,214 நபர்களுக்கு நேர்காணல் நடத்தினர். இதில், 1,172 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்டது.மேலும், 163 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில், 8 ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், நர்சிங் ஆகிய அனைத்து விதமான கல்வித் தகுதிக்கான பணியிடங்கள் உள்ளன. இதில், லுகாஸ் டி.வி.எஸ்., டாடா எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டன.தேர்வாகிய நபர்களுக்கு, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில், அமைச்சர் வன்னி அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.இதில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஆனந்த் குமார்சிங், சப்-கலெக்டர் ஆகாஷ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுந்தர்ராஜன், மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்