உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு தின பேச்சுப்போட்டி: 12ம் தேதி நடக்கிறது

திருப்பூர்: தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.வரும் ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டி, வரும் 12ம் தேதி, பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரியில் நடைபெற உள்ளது. அன்று காலை 10:00 மணி முதல் போட்டிகள் நடைபெறும்.ஆறு முதல் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டியில் பங்கேற்கலாம். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு போட்டிக்கு, ஒரு மாணவர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.தமிழ் இலக்கிய வரலாற்றில் கருணாநிதியின் சுவடுகள் தலைப்பில் கட்டுரை எழுதவேண்டும்; தமிழ் திரை உலகத்தை புரட்டிப்போட்ட கருணாநிதியின் எழுதுகோல் தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. மாவட்ட அளவிலான இப்போட்டியில் முதல் பரிசு, 10 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசு ஏழாயிரம் ரூபாய்; மூன்றாவது பரிசு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்