உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலை மேம்பாட்டுக்கு ரூ.1,380 கோடி

சென்னை: தமிழக அரசின் 2025 - 26ம் நிதியாண்டு பட்ஜெட்டில், 'அண்ணா பல்கலையை, அடுத்த ஐந்தாண்டுகளில், நாட்டின் முன்னணி 10 கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும், உலக 'கியூ.எஸ்' தரவரிசையில் முதல் 150 இடங்களுக்குள் கொண்டு வரவும், ஒரு விரிவான செயல் திட்டம் உருவாக்கப்படும்.இதற்காக, அரசு, பல்கலை நிதி, பழைய மாணவர்கள் மற்றும் தொழில் துறை பங்களிப்புடன், 500 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இதற்கு தேவையான திட்டங்களை, பரிந்துரை செய்யும்படி, அண்ணா பல்கலை பதிவாளருக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியது. அதை ஏற்று, பல்கலை பதிவாளர், 20 திட்டங்களை அரசுக்கு பரிந்துரை செய்தார். இவற்றை செயல்படுத்த, 1,380 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.இதை பரிசீலனை செய்த அரசு, அண்ணா பல்கலை வளாக மேம்பாட்டுக்காக 1,380 கோடி ரூபாய் செலவிட, தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.தமிழக அரசின் சார்பில், 624.60 கோடி ரூபாய்; அண்ணா பல்கலை பங்களிப்பாக 501.85 கோடி ரூபாய்; முன்னாள் மாணவர்கள் மற்றும் சி.எஸ்.ஆர்., நிதி 253.75 கோடி ரூபாய் செலவிட, நிர்வாக அனுமதி அளித்து, உயர்கல்வித்துறை செயலர் சங்கர், அரசாணை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்