திருக்கோவிலுார் வள்ளியம்மை கல்லுாரியில் 16வது ஆண்டு விழா
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரியில் 16 வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த விளையாட்டு விழாவிற்கு ஸ்ரீ லட்சுமி கல்வி அறக்கட்டளை நிறுவன செயலாளர் ராஜா சுப்ரமணியம் தலைமை தாங்கி, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி, விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.பேராசிரியர் சத்திய பிரியா வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுகந்தி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பேசினார்.மாலையில் நடந்த ஆண்டு விழாவை சிறப்பு விருந்தினர் கார்த்திகா ராஜா துவக்கி வைத்தார். பேராசிரியர் ரீனா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தென்னரசி ஆண்டறிக்கை வாசித்தார். தாளாளர் பூபதி ஆண்டு விழா மலரை வெளியிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.சீர்காழி எம்.ஜி.ஆர்., அரசு கலைக் கல்லுாரி உதவி பேராசிரியர் முரளி குமரன், டாக்டர்கள் அருண், கீர்த்தனா, பேராசிரியர் சாமிதேவி, உடற்கல்வி இயக்குநர் பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.