உள்ளூர் செய்திகள்

மதுரை கராத்தே போட்டியில் 17 பதக்கங்களை வென்று சாதனை

மேலுார்: மதுரையில் நடந்த கராத்தே போட்டியில், மேலுார் போதிதர்மா தற்காப்பு கலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 17 பதக்கங்களை வென்று சாதனை புரிந்தனர். ஷோடாகான் இந்தியன் கராத்தே அசோசியேசன் சார்பில் நடந்த போட்டியில் இப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் மில்டன் பள்ளி மாணவர் சிவராமன், அரசு பள்ளி மாணவி சுபபாலா தங்கப் பதக்கம் வென்றனர். மேலும் விஜயகிருஷ்ணன், கோகுலன், எஸ்.எஸ்.வி., பள்ளி மாணவர்கள் மதுமிதா, யஷ்வந்த்குமார், சித்தார்த், பாரதி பள்ளி ஜெகன் வெள்ளி பதக்கம் வென்றனர். தவிர லதாமாதவன், மில்டன், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 7 பேர் வெண்கல பதக்கங்களை வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்