உள்ளூர் செய்திகள்

எம்.பி.ஏ. ,எம்.சி.ஏ., சேர்க்கை 18ம் தேதி துணை கவுன்சிலிங்

கோவை: எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கான துணை கவுன்சிலிங், 18ம் தேதி நடக்க உள்ளது.தமிழகத்திலுள்ள பல்கலை, இன்ஜி., கல்லுாரிகள், கலை அறிவியல் கல்லுாரிகள், மேலாண்மை கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள எம்.பி.ஏ., -- எம்.சி.ஏ., படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, ஆன்லைன் கவுன்சிலிங் வாயிலாக நடந்தது.வரும், 18ம் தேதி, கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு துணை கவுன்சிலிங் நடக்க உள்ளது. பொது கவுன்சிலிங் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள், இதில், நிரப்பப்பட உள்ளன.பொது கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்து கலந்து கொள்ள இயலாதவர்கள், கவுன்சிலிங்கில், கல்லுாரி ஒதுக்கீடு பெறாதவர்கள், &'டான்செட்-2020&' தேர்வு எழுதி, இதுவரை கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்து விண்ணப்பிக்காதவர்கள், பதிவு செய்யாதவர்கள் என, அனைவரும் துணை கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இதற்காக அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்ப மற்றும் கவுன்சிலிங் கட்டணத்துடன், 18ம் தேதி காலை, 10.00 மணிக்கு முன், நேரிடையாக கவுன்சிலிங் மையமான கோவை ஜி.சி.டி., கல்லுாரிக்கு சென்று பங்கேற்கலாம்.இந்த துணை கவுன்சிலிங் தரவரிசை மற்றும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படும்.மேலும் தகவல்களை www.gct.ac.in/www.tn-mbamca.com என்ற, இணையதளத்தின் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்