உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு முகாம்; 196 பேர் பங்கேற்பு

விழுப்புரம்: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 196 பேர் பங்கேற்றனர்.விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மைய அலுவலகத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இந்த மாதத்திற்கான வேலை வாய்ப்பு முகாம் நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 02:00 மணி வரை நடந்தது.இந்த முகாமில், 22 தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்கள் நிறுவனத்திற்காக நேர்காணலை நடத்தினர். இதில், 196 வேலை பேர் கலந்துகொண்டனர். வேலை வாய்ப்பு உதவி இயக்குநர் பாலமுருகன் முகாமை துவங்கி வைத்தார்.இதில், 5 மாற்றுத்திறனாளிகள் உட்பட 62 பேர், வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக இவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.மேலும், 19 பேருக்கு இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முகாம் ஏற்பாடுகளை, வேலை வாய்ப்பு அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்