உள்ளூர் செய்திகள்

வால்பாறை கல்லூரியில் ஜூலை 2ல் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்

வால்பாறை அரசு கலைக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல் வகுப்புகள் துவங்குகின்றன. வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்போது ஆயிரத்து 100 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் இந்த கல்வி ஆண்டில் மட்டும் 198 மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளின் கீழ் படித்துவருகின்றனர். மாணவர்களின் வசதிக்காக இந்த ஆண்டு முதல் பி.ஏ.,(ஆங்கிலம்) என்ற புதிய  பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2ம் தேதி முதலாம் ஆண்டு படிக்கும்  பி.காம்(சி.ஏ) மாணவர்களுக்கு  வால்பாறையில் உள்ள புதிய கட்டடத்தில் வகுப்புக்கள் நடக்கிறது. பி.எஸ்சி(கம்யூட்டர் சையின்ஸ்), பி.சி.ஏ.,ஆகிய பாடப்பிரிவுகளுக்கு சின்கோனாவில் ஜூலை 6ம் தேதியும் வகுப்புகள் நடக்கின்றன. பி.ஏ.,ஆங்கிலம் பாடப்பிரிவுக்கு வகுப்புக்கள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். “முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் வகுப்பு துவங்கும் முதல் நாளில் பெற்றோர்களுடன்  கல்லூரிக்கு வரவேண்டும்” என கல்லூரி முதல்வர் மதிவாணன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்