உள்ளூர் செய்திகள்

சந்திரயான் - 2 பிப்ரவரியில் பயணம்

சென்னை: &'&'சந்திரயான் - 2 செயற்கை கோள், அடுத்தாண்டு, பிப்., 16க்குள் விண்ணில் செலுத்தப்படும்,&'&' என, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, &'இஸ்ரோ&'வின் தலைவர், சிவன் கூறினார். சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: &'சந்திரயான் - -2&' செயற்கை கோள், அடுத்தாண்டு, பிப்., 16க்குள் விண்ணில் செலுத்தப்படும். &'ஜி.எஸ்.எல்.வி., மார்க் - ௩&' ரக ராக்கெட் வழியாக, இந்த செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும். இதற்கான பணிகள், இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும். மீனவர்கள், கடல் எல்லை தாண்டுவதை கண்டறிய உதவும் செயலி, தயாரிக்கப்பட்டு வருகிறது. பருவ மழைக்காலம் முடிந்ததும், இந்த செயலி வெளியிடப்படும். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் குறித்து, ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதன்படி, 2022க்குள், மூன்று மனிதர்களை, விண்ணிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள், &'பி.எஸ்.எல்.வி., சி -- 42&' ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்பின், &'ஜி.எஸ்.எல்.வி., டி - 2&' ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.இவ்வாறு சிவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்