உள்ளூர் செய்திகள்

ஜி - 20 மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லையில் இன்று சுற்றுலா

மாமல்லபுரம்: ஜி - 20 நாடுகள் பிரதிநிதிகள் மாமல்லபுரம் சிற்பங்களை காண வருகை தருகின்றனர்.இதையடுத்து, மாமல்லபுரத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின், பேரிடர் அபாய குறைப்பு பணிக்குழு மாநாடு, சென்னையில் நேற்று முன்தினம் துவங்கியது. நாளை மறுநாள் வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும், பல நாட்டுப் பிரதிநிதிகள் குழுவினர், இன்றும், மற்றொரு பிரதிநிதிகள் குழுவினர், நாளை மறுநாளும், மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை காண வருகின்றனர். இன்றைய குழுவின் 120 பேர், முட்டுக்காடு தக் ஷிணசித்ரா, தென்னிந்திய பாரம்பரிய வீடுகள், பின் மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை காண்கின்றனர்.மாமல்லபுரம் ரேடிசன் புளூ விடுதியில், மதிய உணவருந்திய பின் ஆலோசிக்கின்றனர். அதே விடுதியில், இரவு உணவருந்தி விட்டு, சென்னை புறப்படுகின்றனர். இதையடுத்து, பாதுகாப்பு கருதி, போலீஸ் எஸ்.பி., சாய் பிரணீத் உத்தரவின்படி, மாமல்லபுரம் பகுதி, மாமல்லபுரம் போலீஸ் துணை கோட்ட பகுதி என, 200க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. சாலையோர நடைபாதை கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் கேமரா பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்