இன்ஜி., கல்லூரியில் இன்ஸ்பயர் 2015
கோவை: கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில், இன்ஸ்பயர் 2015 எனும் நிகழ்ச்சி நடந்தது.விழாவில், சென்னை, இன்போசிஸ் நிறுவன மனிதவள இருப்பிடத்தலைவர் சுஜீத்குமார் பேசுகையில், இளம்வயதில் பள்ளி மாணவர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்களாகவும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய அறிவியல் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதன் மூலம் வேலைவாய்ப்புகள் கிடைப்பது உறுதி என்றார். முன்னதாக சென்னை அண்ணா பல்கலை முன்னாள் மாணவர்கள் வேலைவாய்ப்பு இயக்குனர், பெங்களூரு நீச்மைண்ட்ஸ் நிறுவனத்தலைவர் அக்ஷயா, கல்லுாரி நிறுவனத்தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் இந்து, நிர்வாக அறங்காவலர் வித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற, வினாடி வினா நிகழ்ச்சியும் நடந்தது.