உள்ளூர் செய்திகள்

சம்வர்தன் - 2023

இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி நிறுவப்பட்ட, ஐ.சி.ஏ.ஐ., எனும் தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ஸ்ட் ஆப் இந்தியா நிறுவனம், இந்த மாநாட்டை நடத்துவதோடு, சிறந்த தொழில்முனைவோர்களுக்கான விருதுகளையும் வழங்குகிறது.முக்கியத்துவம்: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும். எம்.எஸ்.எம்.இ., எனும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், பின்தங்கிய மற்றும் கிராமப்புற வளர்ச்சியிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. நாட்டில் சுமார் 6.3 கோடி எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் உள்ள நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33 சதவீதம் பங்கு வகிக்கிறது. மொத்தம் 11.3 கோடிக்கும் அதிகமான பேர் இதன் வாயிலாக வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். ஏற்றுமதி சந்தையில் 40 சதவீதம், உற்பத்தித் துறையில் 48 சதவீதம் என்ற அளவில் முக்கிய பங்கு வகிக்கும் இத்துறை, சமீபகாலமாக பணி மதிப்பு இழப்பு, பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு, கோவிட்-19 மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பதட்டங்கள் ஆகியவற்றால் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. அரசாங்க தரவுகளின்படி 5,907 க்கும் மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ., யூனிட்டுகள் மூடப்பட்டுள்ளன. எம்.எஸ்.எம்.இ.,க்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்துதல், ஊதியம் வழங்குதல், மூலப்பொருட்களின் விலை உயர்வை சமாளித்தல், உற்பத்தி செலவு அதிகரித்தல் போன்ற சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. தற்போது, தொற்றுநோயில் இருந்து நாடு மீண்டுவந்துள்ள நிலையில், எம்.எஸ்.எம்.இ.,களிடம் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, சவால்களுக்கு பொருத்தமான தீர்வுகள், ஐ.சி.ஏ.ஐ.,யின் எஸ்.ஐ.ஆர்.சி., நடத்தும் இந்த மாநாட்டில் வழங்கப்பட உள்ளன.  வரும் 2025ம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் குறிக்கோளை அடைவதற்கான உத்திகள் குறித்தும் இந்த மாநாட்டில் விளக்கப்படுகிறது. யார் பங்கேற்கலாம்:* எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள்* தொடக்க நிறுவனங்கள்* சார்ட்டர்டு அக்கவுண்டன்ஸ்* வங்கியாளர்கள்* ஆர்வமுள்ள தொழில்முனைவோர்*  சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள்* கல்வி நிறுவனங்கள்* தொழில் வல்லுநர்கள்* கல்வியாளர்கள்* மாணவர்கள்நிகழ்ச்சி விபரம்: இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் எம்.எஸ்.எம்.இ., மற்றும் ஸ்டார்ட்-அப் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் 9 அமர்வுகள் உள்ளன. அவற்றில், தொழில்துறை தலைவர்கள், மத்திய மற்றும் மாநில எம்.எஸ்.எம்.இ., துறை அதிகாரிகள், ஸ்டார்ட் -அப் நிபுணர்கள், எஸ்.ஐ.டி.பி.ஐ., என்.எஸ்.ஐ.சி., பி.ஐ.சி.சி.ஐ., மற்றும் பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்று துறை சார்ந்த தீர்வுகளை வழங்குகின்றனர்.நாள்: ஜூன் 24 மற்றும் 25இடம்: டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி, சென்னை. விபரங்களுக்கு: இணையதளம்: www.sirc-icai.org/common_events.phpதொலைபேசி: 044-3021 0321/20/23 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்