உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் 21 பேருக்கு எம்.பி.பி.எஸ்., இடம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில், 21 மாணவ, மாணவியருக்கு, எம்.பி.பி.எஸ்., படிக்க இடம் கிடைத்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளியில் படித்து, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் ஆறு மாணவர், 15 மாணவியர் என, 21 பேருக்கு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது. இதேபோல் ஒரு மாணவர், நான்கு மாணவி என ஐந்து பேருக்கு, பல் மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது. இந்த, ௨௬ பேரில், 25 பேர் இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதியவர்கள். ஒருவர் மட்டும் முதல் முறையில் வாய்ப்பு பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்