உள்ளூர் செய்திகள்

பி.ஆர்க். கலந்தாய்வு: ஜூலை 21ம் தேதி துவக்கம்

சென்னை: பி.ஆர்க். கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை அண்ணா பல்கலையில் நடக்கிறது. அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கட்டடவியல் திட்ட கல்லூரியில் உள்ள இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கு தானாக முன்வந்து வழங்கிய நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தமாக 1,669 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கலந்தாய்வு அண்ணா பல்கலையில் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்த முழுமையான அட்டவணையை www.annauniv.edu என்ற பல்கலை இணையதளத்தில் பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்