உள்ளூர் செய்திகள்

கடையில் வேலை செய்த 21 குழந்தைகள் மீட்பு

புதுடில்லி: மத்திய டில்லி சதர் பஜாரில், கடைகளில் வேலை செய்து வந்த 21 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.டில்லி கன்டோன்மென்ட் தாசில்தார் உத்தரவுப்படி அரசு சாரா அமைப்புகள், தொழிலாளர் நலத்துறை மற்றும் போலீசார், மத்திய டில்லி சதர்பஜாரில் உள்ள கடைகளில் 8ம் தேதி அதிரடி ஆய்வு நடத்தினர்.அங்குள்ள பல்வேறு கடைகளில் வேலை செய்த 21 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகளில் 19 பேர் புராரி முக்தி ஆசிரமத்திலும், இரண்டு சிறுமியர் காஷ்மீரி கேட் ரெயின்போ பெண்கள் காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டனர்.குழந்தைகளை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர்கள் மீது டில்லி கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்