உள்ளூர் செய்திகள்

உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க ரூ.2.54 கோடி அரசு ஒதுக்கீடு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 17 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி நிலையங்களுக்கு, 2.54 கோடி ரூபாய் செலவில், நவீன உடற்பயிற்சி கருவிகள் வாங்க, அரசு முடிவு செய்துள்ளது.திருச்சி, கடலுார், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, ஊட்டி, விருதுநகர், தஞ்சாவூர், சென்னை ஆகிய மாவட்டங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், உடற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி நிலையங்களில், நடைபயிற்சி மேற்கொள்ள உதவும் சாதனம், பளு துாக்கும் சாதனங்கள் என, உடற்பயிற்சிக்கு தேவையான, 22 வகை சாதனங்கள் வாங்க, 2.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, &'டெண்டர்&' கோரப் பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்