பசுமை தமிழகம் இயக்கத்தில் 273 பள்ளிகள்
சென்னை: பசுமை தமிழகம் இயக்கத்தில் மரக்கன்றுகள் உருவாக்கும் பண்ணைகளுடன் உள்ளூர் அளவில், 273 பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளதாக, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.தமிழகத்தில், பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பசுமை தமிழகம் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. வனப்பகுதிகள், அரசு மற்றும் தனியார் நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி, இதன் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்ட அறிவிப்பு:பசுமை இயக்க பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில், 206 இடங்களில் உள்ள பண்ணைகளுடன், 273 பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் நேரடியாக அந்தந்த பண்ணைகளுக்கு வரவழைக்கப்பட்டு மரக்கன்றுகள் உருவாக்கம், நடும் முறை, வளர்ப்பு தொடர்பான பயிற்சிகள் அளிக்கும் பணிகள் துவங்கியுள்ளன. மாவட்ட வன அலுவலர்கள் மேற்பார்வையில் இப்பணிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.