பல்கலையில் வேலை என ரூ.29 லட்சம் மோசடி
வடவள்ளி: கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் பிரபு, 41; தொண்டாமுத்துார் ரோட்டில் பெட்ரோல் பங்க் நடத்துகிறார். இவரது மனைவி காவியா. இன்ஜினியரிங் படித்துள்ளார்.பிரபுவின் தந்தை நாராயணுக்கு பழக்கமான ரவிபாரதி, தங்கவேல், ரவிபாரதியின் மகன் சுந்தர கார்த்திக், தங்கவேலுவின் மனைவி உமா ஆகியோர் இணைந்து, பிரபுவிடம், தங்களுக்கு பாரதியார் பல்கலையில் அதிகாரிகளை தெரியும்; காவியாவுக்கு பாரதியார் பல்கலையில் வேலை வாங்கி தருகிறோம் என்று ஆசை வார்த்தைகள் கூறினர்.சிறிது, சிறிதாக பிரபுவிடம் இருந்து, 29 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, வேலை வாங்கி தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து, வடவள்ளி போலீசில் பிரபு புகார் அளித்தார்.ரவி பாரதி, தங்கவேல், சுந்தர கார்த்திக், உமா ஆகியோர் மீதும், வடவள்ளி போலீசார், வழக்கு பதிந்து, தங்கவேலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகின்றனர்.