பல்கலையில் அட்மிஷன்; ஆக., 30 வரை விண்ணப்பிக்கலாம்
மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் 13 இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஆக.,30 வரை இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம். தேர்வான முதற்கட்ட மாணவர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்யலாம். முதுகலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை ஆக.,24 முதல் துவங்குகிறது. விவரங்களுக்கு www.mkucollegemdu2.orgல் தெரிந்துகொள்ளலாம் என முதல்வர் (பொறுப்பு) ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.