பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 31ல் கலந்தாய்வு
தமிழகத்தில் ஆதி திராவிடர் நலத்துறையில், 1,341 துவக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன.இவற்றில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர், உடற்கல்வி இயக்குனர் ஆகிய பணியிடங்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு, வரும், 31 காலை, 10:00 மணிக்கு நடக்கஉள்ளது.மாநில முன்னுரிமை அடிப்படையில் ஆன்லைன் வாயிலாக ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் தலைமையில் நடக்க உள்ளது. இதனால் ஜூன், 1 நிலவரப்படி, பள்ளிகளில் காலியாக உள்ள பணியிட விபரங்களை, அறிவிப்பாக ஒட்டி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.