எம்.எஸ்சி., நர்சிங் கவுன்சிலிங்கில் 33 இடம் காலி
சென்னை: எம்.எஸ்சி., நர்சிங் கவுன்சிலிங்கின் முடிவில் 33 இடங்கள் காலியாக உள்ளன. எம்.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கான கவுன்சிலிங், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஜூலை 21ம் தேதி நடந்தது. இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா கூறுகையில், “எம்.எஸ்சி., நர்சிங் படிப்பில், அரசு கல்லூரிகளில் 47 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 172 இடங்கள் உள்ளன. முதல்நாள் கவுன்சிலிங்கிற்கு 387 பேர் அழைக்கப்பட்டனர். கவுன்சிலிங்கின் முடிவில் 33 இடங்கள் காலியாக உள்ளன. 22ம் தேதி எம்.பார்ம்., படிப்பிற்கான கவுன்சிலிங் நடக்கிறது,” என தெரிவித்தார்.