உள்ளூர் செய்திகள்

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் சூட் ரூம் கேட்கும் பேராசிரியர்கள்

சென்னை: சென்னை பல்கலை மெரினா வளாகத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், அரசு விருந்தினர் மாளிகையில், 'சூட் ரூம்' கொடுத்தால் போதும் என, பேராசிரியர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக பல்கலைகளின் தாய் பல்கலையான சென்னை பல்கலை, நிதி பற்றாக்குறையால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. பராமரிப்பின்றி பல்கலையில் பல கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளன.பல மாதங்களாக பயன்பாடின்றி இருந்த சேப்பாக்கம் வளாக கலையரங்கம் சீரமைக்கும் பணியை பொதுப்பணித்துறை துவக்கியுள்ளது. மெரினா வளாகத்தில் உள்ள பழமையான கட்டடங்களையும் சீரமைக்க தமிழக அரசு முன் வந்துள்ளது.அங்குள்ள ஒன்பது துறைகளை சேர்ந்த வகுப்பறைகளை கிண்டி வளாகத்துக்கு மாற்ற, பல்கலை நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கு, துறைத்தலைவர்கள் ஒத்துழைக்கவில்லை.இந்நிலையில், வகுப்பறைகளை கா லி செய்து தராவிட்டால், மீண்டும் ஒதுக்கிய தொகை அரசுக்கே சென்று விடும் என, பல்கலை பதிவாளர், கடந்த மாதமே துறைத்தலைவர்களை எச்சரித்திருந்தார்.ஆனால், இதுவரை அதற்கான விளக்கம் அளிக்காத துறைத்தலைவர்கள், தற்போது, அருகில் உள்ள விருந்தினர் மாளிகையில், முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள, 'சூட் ரூம்' எனும் சொகுசு அறைகளை ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர் . தமிழ் மொழி மற்றும் இலக்கிய துறையில், 100க்கும் மேற்பட்டோர் தங்களுக்கான வகுப்புகளை, மெரினா வளாகத்தில் உள்ள நுாலக கட்டடத்தில் நடத்த அனுமதி கோரி உள்ளனர்.அதேசமயம், 10க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் மலையாளம், இஸ்லாமிக் ஸ்டடீஸ், கன்னடம் உள்ளிட்ட சிறு துறைகளை, சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள தொலைநிலை கல்வி வகுப்பறைகளுக்கு அனுப்பலாம் என்றும் பதிவாளருக்கு, அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர்கள் தினமும் வந்து, வளாகத்தை காலி செய்து தரும்படி வற்புறுத்துவதால், பல்கலை நிர்வாகம் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்