அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோர்ட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 'போக்சோ' சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த முகாமிற்கு, மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரவீனா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்குமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலாஜி, சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் 'போக்சோ' சட்டம் குறித்து எடுத்துரைத்தனர்.முகாமில், பள்ளி மற்றும் வீட்டில் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் ஏற்பட்டால் அது குறித்து உடனடியாக காவல் துறை உள்ளிட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவிக்க வேண்டும். போக்சோ சட்டம் மற்றும் சட்டத்தில் குழந்தைகளுக்கான உரிமை, பாதுகாப்பு, குழந்தைகளின் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு குறித்து எடுத்துரைத்தனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.