உள்ளூர் செய்திகள்

மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை கோட் வழங்கல்

வண்ணாரப்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கான வெள்ளை கோட் அணிவிக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி 89வது 2026 - 27 கல்வியாண்டில், 237 மருத்துவ படிப்பை தொடங்கும் மாணவ, மாணவியருக்கு, வெள்ளை கோட் மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிவிக்கும் நிகழ்ச்சி, மருத்துவக் கல்லுாரியில் நேற்று நடந்தது.இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் ஆகியோர், மாணவர்களுக்கு, வெள்ளை அங்கியை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி மிகவும் பழமை வாய்ந்த கல்லுாரிகளில் ஒன்றாகும். மருத்துவ படிப்பில் சேர்க்கை பெறுவது கடினமானது. உங்களைப் பார்க்கும்போது, பல ஆண்டுகளுக்கு முன், என்னைய பார்ப்பது போல் உள்ளது.'நீட்ʼ தேர்வை கடந்து வந்தது மிகப்பெரிய விஷயம்.ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது, அவர்கள் டாக்டர்களை கடவுளாக பார்ப்பார்கள். சிகிச்சை முடிந்த பின், நன்றி கூறும்போது ஏற்படும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடையாது.ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில் படித்த மாணவர்களே, பல நாடுகளில் டாக்டர்களாக உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், ராயபுரம் எம்.எல்.ஏ., விஜய் தாமு, உசிலம்பட்டி எம்.எல்.ஏ., விஜய் மகாலிங்கம், மருத்துவ கல்லுாரியின் டீன் அரவிந்த், ஆர்.எம்.ஓ., வனிதா மலர், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்