பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் 5 மாடி கட்டட அடிக்கல் நாட்டு விழா: ஐகோர்ட் அனுமதி
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகே குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற அறைகள், நீதிபதிகள் அறைகள் உள்ளிட்டவை அடங்கிய 5 மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற இருந்தது. நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையில் நடைபெற இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் அடிக்கல் நாட்டு விழா நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.