உள்ளூர் செய்திகள்

சென்னை மாநிலக் கல்லூரிக்கு ரூ.5 கோடி வழங்க யு.ஜி.சி. ஒப்புதல்

சென்னை: சென்னை மாநில கல்லுாரியின் வளர்ச்சிக்காக, பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,), ஐந்து கோடி ரூபாய் வழங்க, ஒப்புதல் தெரிவித்துள்ளது. சென்னை மாநில கல்லுாரியின், பொருளியல் துறை சார்பில், மூன்று நாள் கருத்தரங்கம் சமீபத்தில் நடந்தது. அதில், பல்கலைக்கழக மானியக்குழு துணை தலைவர் தேவராஜன் பங்கேற்று பேசியதாவது: சென்னையில், மிகப்பழைய கல்லுாரிகளில் ஒன்றான மாநில கல்லுாரி, இந்த ஆண்டு, 175வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. கோல்கட்டாவின் மாநில கல்லுாரி, தற்போது பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது. சென்னை மாநில கல்லுாரியும், அதுபோல் வளர வேண்டும். அதற்கு, ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். தமிழக அரசும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாநில கல்லுாரியின் கட்டமைப்பு வளர்ச்சிக்காகவும், பராமரிப்புக்காகவும், பல்கலைக்கழக மானியக்குழு சார்பில், ஐந்து கோடி ரூபாய் வழங்க விரும்புகிறேன். அதற்கான விண்ணப்பத்தை, கல்லுாரி நிர்வாகம் அனுப்பி வைத்தால், நான் உடனடியாக ஒதுக்க ஆவன செய்வேன். இந்திய அரசு, உயர்கல்விக்காக 4.2 சதவீத நிதியை ஒதுக்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்