உள்ளூர் செய்திகள்

நாளை திறனாய்வு தேர்வு: 5,700 மாணவர் பங்கேற்பு

மதுரை: மதுரையில் ஊரகத் திறனாய்வுத் தேர்வை 5,700 மாணவர்கள் நாளை நவ., 21, 25 மையங்களில் எழுதுகின்றனர்.கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நாளை காலை 10:00 முதல் 12:30 மணி வரை இத்தேர்வு நடக்கிறது.மாவட்டம் வாரியாக அதிக மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர், 50 மாணவியர் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு பிளஸ் 2 வரை மாதம் ரூ.ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.சி.இ.ஓ., தயாளன் மேற்பார்வையில் நடக்கிறது. டி.இ.ஓ.,க்கள் செந்தில்குமார், கணேசன், தென்கரை முத்துப்பிள்ளை, ரகுபதி தலைமையில் 40க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் குழுக்களை கல்வித்துறை நியமித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்