விளையாட்டு விடுதி தேர்வு; 59 மாணவர்கள் தகுதி
ஈரோடு: அரசு விளையாட்டு விடுதி மாணவர்கள் திறனாய்வு தேர்வில், 59 பேர் மாநில அளவிலான போட்டித் தேர்வுக்கு தகுதி பெற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநிலம் முழுவதும் விளையாட்டு விடுதிகளில் உள்ளன. இங்கு கல்வியுடன், விளையாட்டு பயிற்சியும் அளிக்கப்படும். விடுதிகளில் நடப்பாண்டுக்கான மாணவ, மாணவியர் தேர்வு தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்ட மாணவர்களுக்கான, உடல் திறன் தகுதித் தேர்வு, வ.உ.சி., மைதானத்தில், நேற்று முன்தினம் நடந்தது. மொத்தம், 90 பேர் பங்கேற்றனர். இதில், 37 மாணவர், 22 மாணவியர் என மொத்தம், 59 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அடுத்த கட்டமாக மாநில அளவிலான போட்டித் தேர்வு, நடக்கிறது. அதில் தேர்வு பெறுவோர் நேர்முக தேர்வுக்குப்பின், விடுதிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என, ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) பியூலா தெரிவித்தார்.