உள்ளூர் செய்திகள்

தமிழ் துறையில் சேர்ந்தால் 60 சதவீதம் கட்டண தளர்வு

புதுச்சேரி: பாரதியாரின் பிறந்த நாள் விழா, புதுச்சேரி பல்கலைக்கழக சுப்ரமணிய பாரதியார் தமிழியற் புல ம், வானவில் பண்பாட்டு மையம் சார்பில் கொண்டாடப்பட்டது. கவர்னர் கைலாஷ்நாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.விழாவில் துணைவேந்தர் பிரகாஷ்பாபு பேசும்பேோது, 'பாரதியார் அனைத்து மொழிகளையும் சமமாக மதித்தவர். தமிழ் மொழியை உயிர்ப்போல் நேசித்தவர். பாரதியார், இந்தியா மட்டுமல்லாது ரஷ்யப் புரட்சி, பெல்ஜியம் வீரத் தியாகம், மேற்கத்திய இலக்கிய மனிதநேயம் போன்ற அனைத்தையும் தனது படைப்புகளில் முன் நிறுத்திய அரிய சிந்தனையாளர்.இக்கோட்பாடுகளை இன்றைய தலைமுறை பின்பற்றுவதே பாரதிக்கு உண்மையான மரியாதை.தமிழுக்கும் தமிழ் துறைக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் வரும் கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணத்தில் 60 சதவீதம் தளர்வு வழங்கப்படும். தமிழ் மாணவர்களுக்கு 66 சதவீதம் வரை கட்டண தளர்வு வழங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்