உள்ளூர் செய்திகள்

கோவை வேளாண் பல்கலையில் 700 பணியிடங்கள் இன்னும் காலி

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமியின் பதவிக்காலம் வரும், 2025 மார்ச், 11ம் தேதியுடன் நிறைவு பெறும் சூழலில், பேராசிரியர், விஞ்ஞானிகள் காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது.வேளாண் பல்கலையின் கீழ், 19 உறுப்பு கல்லுாரிகள், 16 வேளாண் அறிவியல் மையங்கள், 40 ஆராய்ச்சி மையங்கள் செயல்படுகின்றன. 14 இளநிலை படிப்புகள், 33 முதுநிலை, 28 பி.எச்டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன.இப்பல்கலையின் ஆசிரியர்களுக்கு கற்றல் பணியை காட்டிலும், விவசாயிகளுக்கு பயிற்சிகள், விவசாயிகள் ஆலோசனை, குறிப்பாக புதிய ரகங்கள், இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளும், பணிகளும் உள்ளன.விவசாய மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் இப்பல்கலையில், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் பற்றாக்குறை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.கடந்த, 10 ஆண்டுகளாக பணி நியமன செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், கடுமையான பணிச்சுமையால், ஆராய்ச்சி பணிகளில் தொய்வு ஏற்படுவதாக, பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.டீன் ஒருவர் கூறுகையில், கடந்த, 10 ஆண்டுகளாக பணி நியமனங்கள் இல்லை. துணைவேந்தராக பொறுப்பு ஏற்பவர்கள் இறுதிவரை காரணம் மட்டும் கூறி நழுவி விடுகின்றனர். 1,450க்கு தற்போது, 700 இடங்கள் காலியாகத்தான் உள்ளன.ஆசிரியர்கள் அல்லாத அலுவலக பிரிவில், 1,200க்கு 550 இடங்கள் காலியாக உள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் பயன்பாடின்றி வீணாக்கப்பட்டுள்ளன. மாநில அரசு நேரடியாக தலையிட்டு பிரச்னைகளை தீர்க்க வேண்டும்' என்றார்.துணைவேந்தர் கீதாலட்சுமியிடம் காலியிடம் கேட்டதற்கு, பணி நியமனம் விரைவில் மேற்கொள்ள, பாசிட்டிவ் ஆன செயல்பாடுகள் அரசு தரப்பில் நடந்து வருகின்றன, என்றார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்