அரசு உதவி பள்ளிகளுக்கும் 7.5 சதவீத ஒதுக்கீடு
தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு:எங்கள் சங்கத்தின் கீழ், அரசு உதவி பெறும், 2,286 பள்ளிகள் இயங்குகின்றன.அமல்படுத்தவில்லைஅரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இணையாக இருந்தாலும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இந்த ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை.பள்ளி கல்வித்துறையின் பொதுவான திட்டங்கள், அரசு பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும் விதத்தில், அதன் கொள்கை உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடையே, பெரிய அளவில் வேறுபாடு கிடையாது. அரசு பள்ளிகளை நேரடியாக அரசு நிர்வகிக்கிறது; அரசு உதவி பெறும் பள்ளிகளை, அதன் நிர்வாகம் வழியாக அரசு நிர்வகிக்கிறது.ரத்துசமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். எனவே, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், 7.5 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்தி இருக்க வேண்டும்.அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை தவிர்க்கும் வகையிலான சட்டப்பிரிவை, ரத்து செய்ய வேண்டும்.தள்ளிவைப்புஅரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவ படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சரவணன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 5க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.