உள்ளூர் செய்திகள்

போட்டிக்கு தகுதி பெற்ற 8 கல்வி நிலையங்கள்

எஸ்.ஐ.எப்.இ. அமைப்பின் ஒரு அங்கமான ஸ்டூடண்ட்ஸ் இன் ப்ரீ எண்டர்பிரைஸ் இந்தியா நிறுவனம் நடத்த உள்ள தென் பிராந்தியப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற கல்வி நிலையங்களை அறிவித்துள்ளது. சென்னை சவேரா ஹோட்டலில் நடைபெற விருக்கும் இவ்விழாவில், சென்னை, பெங்களூரூவில் உள்ள 8 சிறந்த கல்வி நிலையங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அவற்றின் பெயர்களாவன, வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை, அண்ணா ஆதர்ஷ் காலேஜ், சென்னை, சேஷாத்ரிபுரம் பர்ஸ்ட் கிரேட் காலேஜ், பெங்களூரு, லயோலா காலேஜ், சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ், சென்னை, ஸ்ரீ பகவான் மகாவீர் ஜெயின் காலேஜ், பெங்களூரு, ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் உமன் காலேஜ், சென்னை, டி.ஆர்.பி.சி.சி. ஹிந்து காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ், சென்னை. இந்த சிறந்த கல்லூரிகள், இந்தியா தேசியப் போட்டியில் மற்ற பிராந்தியப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரிகளுடன் மோதும். இறுதிப் போட்டி ஜுலை 1ம் தேதி மும்பை, தி லலித், ஹோட்டல் இன்டர்கான்டினெண்டலில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பொறும் கல்வி நிலையம், இந்தியா சார்பில் மலேசியாவில் செப்டம்பர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும். 39 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் நாட்டிற்கு எஸ்.ஐ.எப்.இ. குளோபல் பட்டம் வழங்கப்படும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்