குழந்தை தொழிலாளர்களுக்காக மே.வங்கத்தில் 850 சிறப்புபள்ளிகள்!
கொல்கத்தா: குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி வழங்க, ஏதுவாக மேற்கு வங்க அரசு சிறப்பு பள்ளிகளை அமைத்து வருகிறது. இப்பள்ளிகளின் எண்ணிக்கை 850யை தாண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2001ம் ஆண்டு கண்க்கெடுப்பின்படி, மேற்கு வங்கத்தில் மட்டும் 8 லட்சத்து 57 ஆயிரத்து 86 குழந்தைகள் வேலைக்கு செல்வதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து, மாநில தொழிலாளர் துறை முதன்மை செயலர் திரிலோசன் சிங் கூறிகையில், ‘மீட்கபட்ட குழந்தை தொழிலாளர்கள் சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின்கீழ் இயங்கும் இந்த சிறப்பு பள்ளிகளால் 44 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். அக்குழந்தைகள் மீண்டும் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து கல்வி பெறுகின்றனரா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். சிறப்பு பள்ளிகளில் இணைப்பு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், சிறப்பு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ரெகுலர் பள்ளிகளில் சேர்க்கப்படுவர்‘ என்றார்.